தமிழக செய்திகள்

நவம்பர் 1-ந்தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், வரும் நவம்பர் 1-ந்தேதியில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ஐகோர்ட்டு வெளியிட்ட உத்தரவின்படி கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. எனவே வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும்.

சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் ஆழியார், சோலையார் சோதனை சாவடிகளிலும் இ-பாஸ் பெறலாம். இ-பாஸ் இல்லாத வாகனம் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படாது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது.

சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருவதை கண்காணிக்க வருவாய்த்துறையினர், வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறையினர் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து