கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30, 31 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து அதே தேதிகளில் மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06058) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்