சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு மற்றும் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயேசு கிறிஸ்து போதித்த தியாகம், சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகிய உயரிய குணங்களை பின்பற்றி சமூக மற்றும் சமுதாய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.
பகைவர்களிடமும் அன்பு செலுத்துங்கள் என போதித்து மனிதகுலத்தின் நல்வழிகாட்டியாக திகழும் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்நாளில், மக்கள் அனைவரிடமும் மனிதநேயமும் சகோதரத்துவமும் மென்மேலும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.