தமிழக செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் கலைவேந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மின் பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூன் மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெறுகிறது. எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், தஞ்சை வடக்கு, திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலகங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை