தமிழக செய்திகள்

கனமழை எதிரொலி: நெல்லை, தஞ்சை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக நெல்லை, தஞ்சை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முறையே தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் திருவாரூர் ஆட்சியர் காயத்ரி அறிவித்து உள்ளனர்.

இதேபோன்று கனமழை எதிரொலியாக நெல்லை, தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை