கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக கரையை கடக்க தொடங்கியது. சென்னை அருகே இரண்டு மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசியது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை வலுவை இழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்