தமிழக செய்திகள்

‘நிவர்’ புயல் எதிரொலி - 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

‘நிவர்’ புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் உருவான, நிவர் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த புயல் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் புயல் பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகளில் நீர் தேங்கியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு நாள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது, நிவர் புயல் காரணமாக கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்