சென்னை,
இந்தியாவில் கொரோனா வைரசால் 1,071 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன்படி, வருகிற ஏப்ரல் 1ந்தேதி மற்றும் ஏப்ரல் 4ந்தேதிகளில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகங்கள் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறநிலையத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று கோவில்களில் ஹோமம், பாராயணம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனினும், இந்த யாகங்களில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது என்றும் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.