கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நிறைவு

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு அடைந்துள்ளது.

தினத்தந்தி

கரூர்,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல், சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது.

இதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டிலும் சோதனை நிறைவடைந்தது. சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 15 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது