தமிழக செய்திகள்

கவர்னரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசுகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து வருகிறார். அந்தவகையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் கவர்னரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்கிறார். மேலும், கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் அப்போது அவர் வழங்குகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் செல்ல இருக்கின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்