தமிழக செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தினத்தந்தி

சென்னை,

சீனா உள்பட பல்வேறு நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் கால் பதித்துள்ளது. ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க என்ஜினீயருக்கு, கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்துள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று(திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அரசு செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், போதிய மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பது பற்றியும் முதல்-அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை