தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு நோட்டீஸ்

எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை

கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சாலை அமைப்பதில் இழப்பு ஏற்படுத்தியதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அறப்போர் இயக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரியும், உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பியதற்காக ரூ. 1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்டுள்ள மானநஷ்ட ஈடுக்கோரிய மனுவுக்கு விளக்கம் கேட்டு அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்