தமிழக செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி

தொலைபேசியிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது பிறந்த நாளையொட்டி, நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்துள்ள அ.தி.மு.க. பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இதயபூர்வமான நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், எனது பிறந்த நாளையொட்டி நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்துள்ள தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நடிகர் விஜய்க்கும் மற்றும் கலைத் துறையினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை