மதுரை,
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளை (மார்ச் 1) புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்காக இன்று இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.