விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய வீரலட்சுமி தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், பொதுநலசேவகர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கணேஷ் வரவேற்றார். விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன் கலந்து கொண்டு 72 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி பொதுத்தேர்வை எவ்வாறு அணுகி வெற்றி பெற வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.