தமிழக செய்திகள்

பள்ளிகளில் சுதந்திர தினவிழாவை கொண்டாடுவது குறித்து கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிகளில் சுதந்திர தினவிழாவை கொண்டாடுவது குறித்து கல்வித்துறையின் சுற்றறிக்கையில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவினை அனைத்து பள்ளிகளிலும் சில வழிமுறைகளை பின்பற்றி கொண்டாட அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றன. அதன்படி, பள்ளிகளில் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாட வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன்களப்பணியாளர்களாக செயல்படும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவையினை பாராட்டும் பொருட்டு அவர்களை அழைத்து சிறப்பிக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு பூரண குணம் அடைந்தவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம்.

விழா நடைபெறும் பகுதிகளில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் சுதந்திர தினவிழா நாளான 15-ந்தேதி அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பெருந்தொற்று குறித்து அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி சுதந்திர தினவிழாவினை கொண்டாட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது