தமிழக செய்திகள்

கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள் ஆன்லைன் மூலம் புதுப்பித்தலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்

நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மாணவர்களின் உள்ளீடு சென்று ஆதார் எண் அளித்து இ-கே.ஒய்.சி. சரிபார்த்தல் செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும். கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு கடந்த 11-ந் தேதி முதல் செயல்பட தொடங்கின. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மாணவர்களால் அடுத்தமாதம் (நவம்பர்) 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா