தமிழக செய்திகள்

சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடனுதவி

சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.

தினத்தந்தி

சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.

தொழில் கடன்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர், சுய உதவி குழு சிறுதொழில் கடன், கைவினை கலைஞர் கடன், கல்வி கடன் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் முதல் திட்டத்தின்கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1.20 லட்சத்துக்குள், கிராமப்புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 2-வது திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 1-வது திட்டத்தில் தனிநபர் கடன் ரூ.20 லட்சம், 2-வது திட்டத்தில் ரூ.30 லட்சம், கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம், சுய உதவி குழு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

கல்வி கடனுதவி

மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பகல்வி பயில்பவர்களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்ப மனுவுடன் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு பள்ளி மாற்று சான்று, கல்வி கட்டண ரசீது, மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களின் நகல் சமர்ப்பித்து பயன்பெறலாம் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை