தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

இவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக உள்ள கோவிந்தராஜுலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமார குரூப், முரளிசங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராம்ராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்து இருந்தது.

கூடுதல் நீதிபதிகளாக கடந்த 2020 டிசம்பர் 3-ல் பதவியேற்ற நிலையில், கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவர்களில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட சதிகுமார் சுகுமார குரூப் என்பவர் மட்டும் இன்று பதவியேற்கவில்லை. அவர் மற்றொரு நாளில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து