தமிழக செய்திகள்

காஞ்சீபுரத்தில் செங்கல்லால் தாக்கி முதியவர் கொலை

காஞ்சீபுரத்தில் செங்கல்லால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் அங்கு காஞ்சீபுரம், பூக்கடை சத்திரம், செட்டிகுளம் பள்ளத்தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் மது குடித்து கொண்டிருந்தார்

இதை பார்த்த அந்த முதியவர் இங்கே மது குடித்தால் கையை உடைத்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. அதைக் கேட்டு கோபம் அடைந்த அந்த சிறுவன் பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால் முதியவரை கழுத்தில் அறுத்துள்ளார். மேலும் அருகில் இருந்த செங்கல்லால் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது