தமிழக செய்திகள்

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

நெகமம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

நெகமத்தை அடுத்த செட்டியக்காபாளையத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள்(வயது 65). இவர் சர்க்கரை நோய் மற்றும் நெஞ்சுவலி காரணமாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் மனவிரக்தியுடன் காணப்பட்டார்.

இந்தநிலையில் கன்னியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கன்னியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து