தமிழக செய்திகள்

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

ஈத்தாமொழி:

ஈத்தாமொழியை அடுத்த புதூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 70). இவருக்கு குமார் என்ற மகன் உள்ளார். குமார் மனைவியை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குமாருக்கும், செல்லம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த செல்லம்மாள் அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் பரிதாபமாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து செல்லம்மாளின் தம்பி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.