தமிழக செய்திகள்

செங்கல்பட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

செங்கல்பட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.

தினத்தந்தி

திருக்கச்சூர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சாலாட்சி (வயது 72). இவர் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் தனியார் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலிசார் அஞ்சாலாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் தனியார் பஸ் மோதி விபத்து ஏற்படுத்திய டிரைவர் மேகநாதன் (40) பஸ் நிலையத்திலேயே பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

விபத்து ஏற்படுத்திய பஸ்சை கைபற்றிய போலீசார் போலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை