தமிழக செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

சந்தவாசலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.

தினத்தந்தி

கண்ணமங்கலம்

சந்தவாசலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி.ரோட்டில் தனியார் திருமண மண்டபம் அருக அந்த வழியாக நடந்து சென்ற 70 வயது மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அது குறித்தும், விபத்துக்கு காரணமான வாகனம் மற்றும் தப்பிய டிரைவர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை