தமிழக செய்திகள்

ராமநாதபுரம் கோடாங்கிப்பட்டி வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு

அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததால், ராமநாதபுரம் கோடாங்கிப்பட்டி வாக்குச்சாவடியில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சிக்கு உட்பட்ட கோடாங்கிப்பட்டி என்ற கிராமத்தில், மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர். பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த இந்த கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சாலைகளில் கழிவுநீர் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இருந்து வருகின்றன.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக இன்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வாக்காளர்கள் யாரும் வாக்கு செலுத்த வராததால், கோடாங்கிப்பட்டி வாக்குச்சாவடி எண் 312 வெறிச்சோடு காணப்படுகிறது.

கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாக்கு செலுத்த வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த வாக்குச்சாவடியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்