தமிழக செய்திகள்

தேர்தல் கல்வியறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் தேர்தல் கல்வியறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் கல்வியறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வரபிள்ளை தலைமை தாங்கினார். தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஜெயந்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் உதரி கலெக்டர் கவிதா கலந்து கொண்டார். மாணவர்களுக்கு வாக்களிப்பதன் நோக்கம் குறித்து பேச்சு போட்டி நடந்தது. மேலும் மாணவர்களின் நடனம், கதகளி நடனமாடி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதோடு மாதிரி வாக்குச் சாவடி அமைத்து எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்தும் செய்து காண்பித்தனர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அருண் ஜெய்சங்கர், கனிமொழி ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் புவியரசன் நன்றி தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்