தமிழக செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு

காரியாபட்டி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தினத்தந்தி

காரியாபட்டி, 

காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் வேங்கைமார்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக முடுக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வாலைமுத்துச்சாமி புதிய தலைவராகவும், குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி செயலாளராகவும், தோணுகால் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

பந்தனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி துணைத்தலைவராகவும், வி.நாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையடியான் துணைச்செயலாளராகவும், தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயாகுமரேசன் துணை பொருளாளராகவும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் சேர்ந்து ஒருமனதாக தேர்வு செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரை சந்தித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அப்போது அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் உடனிருந்தனர்.

காரியாபட்டி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து