தமிழக செய்திகள்

ரெயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

ரெயில்வே துறையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்; புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு கர்நாடகாவை உள்ளடக்கிய தென்மேற்கு ரெயில்வேக்கு 1448 கோடி ஒதுக்கிய ரயில்வே துறை தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு ரெயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ஆனால் தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவின் புதிய வழித்தடங்களுக்கு 2286 கோடி அறிவித்துவிட்டு இப்பொழுது 1448 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு 971 கோடி அறிவித்து விட்டு 301 கோடி மட்டுமே தந்துள்ளது. #வஞ்சிக்கப்படும்_தமிழ்நாடு. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்