தமிழக செய்திகள்

பொன்னணியாறு, காவிரி நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு 21-ந் தேதி தேர்தல்

பொன்னணியாறு, காவிரி நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 9-ந் தேதி நடக்கிறது.

தினத்தந்தி

சங்கங்களுக்கு தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில், தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட பொன்னணியாறு மற்றும் காவிரி டெல்டா உப வடிநில பகுதிகளுக்குட்பட்ட 53 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு படிவங்கள் கந்தர்வகோட்டை, விராலிமலை, இலுப்பூர் மற்றும் குளத்தூர் தாசில்தார் அலுவலகங்களில் வழங்கப்படும். புதுக்கோட்டை, இலுப்பூர் ஆர்.டி.ஓ.க்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்படுவர்.

வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனுக்கள் வருகிற 9-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். இறுதி வேட்பு மனுக்களின் பட்டியல் வருகிற 12-ந் தேதி வெளியிடப்படும். வேட்பு மனுக்கள் திரும்பப்பெற அன்றே கடைசி நாளாகும். போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்தல், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் பணி 12-ந் தேதி மாலை 4 மணிக்கு மேல் நடைபெறும். வாக்குப்பதிவு 21-ந் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒப்புதல் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் நில உரிமைதாரர்கள் தலைவர் பதவிக்கு ரூ.300, ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு