தமிழக செய்திகள்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30 ஆம் தேதிகளில் தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் நடைபெறும்.

* டிசம்பர் 16 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

* டிசம்பர் 17 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை

* வேட்பு மனுக்களை திரும்ப பெற 19 ஆம் தேதி கடைசி நாளாகும்.

* வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது