தமிழக செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தேதி மாற்றம் -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்ற கடந்த 4, 5-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்ற கடந்த 4, 5-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, வரும் 18, 19-ந் தேதிகளில் 2-ம் கட்டமாக முகாம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், தீபாவளியை முன்னிட்டு 13-ந்தேதி அரசு பொது விடுமுறையாக அறிவித்தது, அதற்கு பதிலாக 18-ந்தேதியை வேலை நாளாக அறிவித்தது. இதனால் வரும் 18, 19-ந் தேதிகளில் நடக்க இருந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம், 25, 26-ந் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை