தமிழக செய்திகள்

சாய்ந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள்

திருவாரூர் அருகே கொட்டாரக்குடி சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் காணப்படுகின்றன. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

திருவாரூர் அருகே கொட்டாரக்குடி சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் காணப்படுகின்றன. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாய்ந்த மின்கம்பங்கள்

திருவாரூர் அருகே காட்டாற்று பாலத்தில் இருந்து கொட்டாரக்குடி செல்லும் சாலையின் இருபுறங்களில் வயல்களாக இருந்து வருகிறது. இந்த வழியாக கல்பானமகாதேவி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையாக இருந்து வருகிறது. இதனால் இந்த சாலையில் எந்தநேரம் போக்குவரத்து மிகுதியாக இருந்து வருவது வழக்கம்.

இந்த சாலையில் 2 மின் கம்பங்கள் மிகவும் வயல் பகுதியில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

தற்போது மழை காலம் தொடங்கும் நிலையில் அதி வேகமாக காற்று வீசினால் இந்த மின் கம்பம் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்து வருகிறது.

எனவே விபத்து எற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் அதை கவனித்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சாய்ந்து நிற்கும் மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து