தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கும்பகோணம் அருகே ஓட்டலில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே ஓட்டலில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கியது

கும்பகோணம் அருகே உள்ள மாதுளம் பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த சிலம்பரசன். இவருடய மகன் பரணிதரன் (வயது30). இவர் மேம்பாலம் இறக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் பரணிதரன் ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விசாரணை

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை