தமிழக செய்திகள்

பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டது..!

சென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது.

சென்னை,

சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட மின்சார ரெயிலின் ஒரு பெட்டி பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கிழே இறங்கின. இதையடுத்து, டிரைவர் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இந்த ரெயில் சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு சென்றது.

சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஊழியர்கள் பெட்டியின் 4 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடம் புரண்ட ரெயில் பெட்டியில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு