தமிழக செய்திகள்

தண்டவாளத்தில் விரிசல்- மின்சார ரெயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக மின்சார ரெயில்கள் தாமதமாக வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT