தமிழக செய்திகள்

ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலி

ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலியானார்.

தினத்தந்தி

ஆற்காடு

ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலியானார்.

ராணிப்பேட்டை மகாவீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் விளாபாக்கத்தில் உள்ள மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்று விட்டு இரவு ராணிப்பேட்டை நோக்கி மேட்டார்சைக்கிளில் வந்தார்.

ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது பின்னால் வந்த லாரி விஜயகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்