திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பின்வரும் கோட்டங்களுக்கு உட்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் பகல் 11 மணியளவில் பின்வரும் நாட்களில் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படும்.
அதன்படி மார்ச் 3ம்தேதி முதலாவது செவ்வாய்க்கிழமையன்று வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 6ம் தேதி முதலாவது வெள்ளிக்கிழமையன்று திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 10ம் தேதி இரண்டாவது செவ்வாய்க்கிழமையன்று தென்காசி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 13ம் தேதி இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும்,
மார்ச் 17ம் தேதி மூன்றாவது செவ்வாய்க்கிழமையன்று கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 20ம் தேதி மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மார்ச் 24ம் தேதி நான்காவது செவ்வாய்க்கிழமையன்று திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.