தமிழக செய்திகள்

திருத்தணியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் - 19-ந்தேதி நடைபெறுகிறது

திருத்தணியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருத்தணி, அரக்கோணம் சாலையில், உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், வருகின்ற 19-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற இருக்கின்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளையும், புகார்களையும் தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்தும் மனுவும் அளிக்கலாம். எனவே, திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்