தமிழக செய்திகள்

முள்ளக்காட்டில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

முள்ளக்காட்டில்மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

ஸ்பிக்நகர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமையில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முள்ளக்காடு மின்விநியோக பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், மின் நுகர்வோர்களுக்கு இணைய வழி மின்கட்டணம் செலுத்துதல், இணைய வழியில் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு தொடர்பான விண்ணப்பங்களை பதிவு செய்தல், மின் இணைப்பு பெயர் மாற்றம் குறித்த சிறப்பு முகாம் தொடர்பான பயன்கள் குறித்தும் மேற்பார்வை பொறியாளர் விளக்கம் அளித்தார்.

இந்த முகாமில் செயற்பொறியாளர் ராம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ஆறுமுகம், உமையொருபாகம், உதவிப் பொறியாளர்கள் முருகபெருமாள், தேவராஜ், சுதா, சரண்யா, பகவதி மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை