தமிழக செய்திகள்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பாளையங்கோட்டை மகாராஜ நகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 10 துணை மின் நிலையங்களில் உள்ள களப்பணியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை "அவுட் சோர்சிங்" முறையில் நிரப்புவதை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரந்தர தன்மையுடன் கூடிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் நாகையன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் முருகேசன், துணைத்தலைவர்கள் சந்திரசேகர், தளபதி, செயலாளர் கந்தசாமி, நகர் புற நிர்வாகி முத்தையா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு