தமிழக செய்திகள்

தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

வேப்பனப்பள்ளி அருகே தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.

தினத்தந்தி

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரலப்பள்ளி வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் பதிமடுகு கிராமத்தில் புகுந்த யானைகள் முனியப்பன் என்பவரது தக்காளி தோட்டத்தில் புகுந்து செடிகளை மிதித்தும், பழங்களை தின்றும் அட்டகாசம் செய்தன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயி முனியபபன் தக்காளி செடிகளை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசு வெடிகள் வைத்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த யானைகள் வேறு வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிகரளபள்ளி வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது