தமிழக செய்திகள்

தகுதி நீக்கப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுப்பு தினகரனுக்கு 148 எண் இருக்கை

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள தினகரனுடன் வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தலைமை செயலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. #TNGovernor | #TNAssembly

தினத்தந்தி

சென்னை

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், முதன்முறையாக சட்டசபைக்குள் செல்கிறார். அதேநேரத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. சட்டப்பேரவை இருக்கை எண் 148 தினகரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வந்தனர். சுயேட்சை எம்.எல்.ஏவான தினகரனும் வந்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் தினகரனுடன் வந்திருந்தனர். ஆனால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் தினகரனை வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

அதன்பிறகு தினகரன் மட்டும் உள்ளே சென்றார். அவரது ஆதரவு தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் வெளியே நிறுத்தப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கவரனர் உரை நிகழ்த்தினார்.

கவர்னர்உரைக்கு திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கவர்னரை பேசவிடாமல் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சல், குழப்பம் செய்தனர். விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் கருத்துக்களை தெரிவிக்குமாறு ஆளுநர் அறிவுரை கூறினார். ஆனால் இதை ஏற்காமல் கவர்னர் உரையை திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் ஆகிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.

#TNGovernor | #TNAssembly | #DMK | #DMKWalkout

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை