தமிழக செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரம் கோடி நகைக்கடன் தள்ளுபடி- அரசாணை வெளியீடு

கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரம் கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரம் கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த அரசாணையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;-

40 கிராமுக்கு குறைவான நகைக்கடன்கள் தள்ளுபடி, ஒரு குடும்பத்துக்கு 5 சவரன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசல், வட்டியை அரசு ஏற்று, தள்ளுபடி தொகையை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

நகைக்கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16 லட்சம் நகைக்கடன்தாரர்கள் பயன்பெறுவர்.தள்ளுபடி தொடர்பான கூடுதல் நெறிமுறைகளை கூட்டுறவு சங்கப் பதிவாளர் வகுத்து கொள்ளலாம். நகைக்கடன் தள்ளுபடி என்பது குடும்பத்திற்கு 5 சவரன் என சில தகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு