தமிழக செய்திகள்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். முன்னதாக சங்க நிர்வாகி கணபதி வரவேற்று பேசினார். செயலாளர் கலியமூர்த்தி அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி வரவு-செலவு வாசித்தார். நீத்தார் நிதி உதவி திட்ட செயலாளர் ராஜேந்திரன் திட்ட வரவு-செலவு வாசித்தார். கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். கம்யூடேஷன் பிடித்ததை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். வழக்கு மன்றங்களில் தமிழில் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும். காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து