தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

திருவாரூரில் மின்கம்பத்தில் ஏறி மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தினத்தந்தி

திருவாரூர்;

திருவாரூரில் மின்கம்பத்தில் ஏறி மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்வாரிய ஊழியர்

திருவாரூர் மின்வாரிய அலுவலகத்தில் நகர பிரிவில் கேங்மேனாக பணியாற்றி வந்தவர் தமிழரசன் (வயது35). இவர் நேற்று மாலை திருவாரூர் பேபி டாக்கிஸ் சாலையில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்சார வினியோக குளறுபடியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.தமிழரசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் மின்வாரியத்தில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு அருள்மொழி (28) என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்