தமிழக செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளியிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர் பணி நீக்கம்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளியிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அங்கு 273 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரியிலும், ரெயில்வே ஆஸ்பத்திரியிலும் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்தநிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம், ஒப்பந்த சுகாதார பெண் பணியாளர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த டீன் சங்குமணி உத்தரவிட்டார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் ஊழியர் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த பெண் ஊழியர் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார். இதுபோல், வேறு யாரும் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டீன் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்