தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி ஊழியர் காயம்

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் காயம் அடைந்தார்.

காரிமங்கலம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிவேல் (வயது 50). மின் வாரிய ஊழியர். இவர் நேற்று முன்தினம் பேகாரஅள்ளி ஊராட்சி பழையூர் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அவர் மின் இணைப்பை துண்டித்து விட்டு டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மணிவேலை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.