தமிழக செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 226 டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

கொரோனா பரவல் காரணமாக அரசியல்வாதிகள், பொதுப்பணி மற்றும் சுகாதாரப்பணிகளில் ஈடுபடுவோர், காவல்துறையினர், மருத்துவர்கள் என பல்வேறு துறையினர் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு டாஸ்மாக் மேலாளர் ராஜா மற்றும் செஞ்சி டாஸ்மாக் விற்பனையாளர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 226 டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரேனா தொற்றினால் பாதிக்கப்பட்டு டாஸ்மாக் மேலாளர் ராஜா மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தமிழக அரசு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்