தமிழக செய்திகள்

வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

நத்தம் என்.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் வணிக செலவு கணக்காளர்களுக்கான வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

நத்தம் என்.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் வணிக செலவு கணக்காளர்களுக்கான வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு என்.பி.ஆர். கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் 'தி இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டன்ட்' நிறுவன தலைவர் கலைச்செல்வன், செயலாளர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய உறுதியான வேலை வாய்ப்பினை பெற்று தருவதே நோக்கம் என்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்