தமிழக செய்திகள்

சென்னையில் ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை

சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாதவரம் பேருந்து நிலையம் அருகே ரவுடி வல்லரசு என்பவர் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி வல்லரசுவை கைது செய்ய போலீசார் முயன்ற போது, போலீசாரை வல்லரசு அரிவாளால் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடி வல்லரசு சுட்டுக்கொல்லப்பட்டார். வல்லரசு மீது ஏராளமான கொலை , கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வல்லரசு தாக்கியதில், இரண்டு போலீசார் காயம் அடைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த இரு உதவி ஆய்வாளர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு